நாகையில் பரபரப்பு - பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை!

ஏப்ரல் 15, 2019 298

நாகை (15 ஏப் 2019): நாகை அருகே பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் காமேஸ்வரம் பகுதியில் உள்ள ஏரியில் ஆண் சடலம் மிதப்பதை கண்ட பொதுமக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கீழையூர் போலீசார் தலையில் பலத்த ரத்த காயங்களுடன் சடலத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கொலையான நபர் திருப்பூண்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பதும் இவர் பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் போட்டியால் கொலை நடைபெற்றதா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டிய முதியவர் படுகொலை செய்யப் பட்ட நிலையில் நாகையில் பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...