விஜய்காந்தை கண்டு வேதனை அடைந்த தொண்டர்கள்!

ஏப்ரல் 16, 2019 188

சென்னை (16 ஏப் 2019): விஜய்காந்தின் தற்போதைய நிலையைக் கண்டு தேமுதிக தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் எப்போது பிரச்சாரத்திற்கு வருவார் என காத்துக்கிடந்த தொண்டர்களுக்கு, மகிழ்ச்சி அளிக்கும் விதமாக விஜயகாந்த் நேற்று மூன்று இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவரை பார்த்ததில் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், அவரின் நிலையை கண்டு பலர் வேதனையடைந்தனர். வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே அவர் தனது பிரச்சாரத்தை துவங்கினார். அங்கு மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்னர், கொளத்தூர், பெரம்பூர், திரு.வி.க. நகர், ராயபுரம், திருவொற்றியூர், ஆர்.கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடசென்னை தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜூக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

அதனை தொடர்ந்து இறுதியாக விருகம்பாக்கம் பகுதியில் தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனுக்கு பிரச்சாரம் செய்தார். இந்த மூன்று இடங்களிலும் விஜயகாந்த் பெரிதாக ஏதும் பேசவில்லை, குறைவாகவே பேசினார். ஒரு சில இடங்களில் அவர் பேசியது கூட சரியாக புரியவில்லை.

இதனிடையே அவரது தொண்டர்கள் அவர் இப்படி பிரச்சாரம் மேற்கொள்ளாமல் ஓய்வெடுத்தாலே போதும் யாரும் இவரை எதிர் பார்கவில்லை என்றனர். மேலும் இவரை துன்புறுத்தும் பிரேமலாதா மற்றும் அவரது தம்பி மீது பலரும் அதிருப்தி அடைந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...