தூத்துக்குடி தேர்தலும் ரத்தா?

ஏப்ரல் 16, 2019 483

தூத்துக்குடி (16 ஏப் 2019): தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை உடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்துள்ளது. இந்த சூழலில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் நடத்தப் பட்ட ரெய்டில் பல கோடி ரூபாய் சிக்கியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்லது

இந்நிலையில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். இதையொட்டி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக தூத்துக்குடி குறிஞ்சி நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். கனிமொழி வீட்டின் மேல் தளத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட ஆட்சியர் வருமான வரித்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.

கனிமொழியின் வீடு மற்றும் அலுவலகங்களில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து உள்ளே நுழைய, வெளியே செல்ல வருமான வரித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

இதனால் தமிழக தேர்தல் களம் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு பணம் எதுவும் சிக்கினால் தூத்துக்குடி தேர்தலும் ரத்தாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...