பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் இணைய தள விவரங்கள்!

ஏப்ரல் 17, 2019 666

சென்னை (17 ஏப் 2019): வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி http://tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.nic.in/ ஆகிய இணைய தள முகவரிகளில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் மாணவர்கள் சமர்ப்பித்த மொபைல் எண்ணுக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

மதிப்பெண் மறு கூட்டலுக்கு ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...