ஆண்டிப்பட்டியில் பரபரப்பு - கைப்பற்றப் பட்ட பணம் அதிமுகவினருடையதா?

ஏப்ரல் 17, 2019 265

ஆண்டிப்பட்டி (17 ஏப் 2019): ஆண்டிப்பட்டியில் வருமான வரித்துறையினர் கைபற்றிய பணம் அதிமுகவினருடையது என்று அமுமுக வேட்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகம் எங்கும் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல இடங்களில் பண பட்டுவாடா படு ஜோராக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஆளுங்கட்சியினர் பட்டுவாடா செய்வதை தடுக்காமல் எதிர்கட்சியினரை போலீசார் குறிவைத்து பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆண்டிப்பட்டியில் அமுமுகவினருக்கு சொந்தமான கடையில் ஒன்றரை கோடி ரூபாய் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அந்த பணம் அதிமுகவினருடையது என்று அமுமுக வேட்பாளர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக தகவல் கொடுத்ததே நான்தான் ஆனால் அவர்களிடம் கைபற்றிய பணத்தை எங்கள் பணம் என்று வரித்துறையினர் குற்றம் சுமத்துகின்றனர். என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...