தேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா!

ஏப்ரல் 17, 2019 255

தேனி (17 ஏப் 2019): தேனி தொகுதியில் அதிமுகவினர் பண பட்டுவாடா செய்யும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் கட்சி பேதமின்றி பண பட்டுவாடா செய்யப் பட்டு வருகின்றன.

இந்நிலையில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் பண பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு ஆதாரமாக சொக்க நாதபுரம் முன்னாள் பேருராட்சி தலைவர் சவீதா அருண்பிரசாத் பணம் பட்டுவாடா செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இதை அடுத்து அமுமுக சார்பில் போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. இதனை அடுத்து இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...