கடைசி வரை சொதப்பலை விடாத திண்டுக்கல் சீனிவாசன்!

ஏப்ரல் 17, 2019 239

திண்டுக்கல் (17 ஏப் 2019): சொதப்பல் மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் நேற்றும் தனது சொதப்பல் பேச்சை விடவில்லை.

தமிழகத்தில் நேற்றுடன் பிரசார மழை பெய்ந்து ஓய்ந்துவிட்டது. நேற்று பிரசாரத்தின் இறுதிநாள் ஆகையால் அனைத்துக் கட்சிக்ளும் தீவிரமாக பிரசாரம் செய்தனர். அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறினார். இதற்கு சமூக வலைதளத்தில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பில் ஜோதிமுத்து என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அப்பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஜோதிமுத்து என்பதற்குப் பதில் சோலைமுத்து என்று மாற்றி சொல்லிவிட்டார். இதனைக் கேட்டு பாமகவினர் சற்று அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அருகில் நின்றிருந்த ஜோதிமுத்து அவரைப் பார்த்த போது, சுதாரித்து ஜோதிமுத்துவுக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.

பல தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது உளறினாலும் கூட அதிகம் உளறிக்கொட்டி உளறல் மன்னன் என்று பெயர் பெற்றவர் திண்டுக்கல் சீனிவாசன் மட்டுமே.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...