தமிழகத்தில் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது!

ஏப்ரல் 18, 2019 224

சென்னை (18 ஏப் 2019): தமிழகத்தில் பல இடங்களில் வாக்கு எந்திரங்கள் பழுதானதால் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மக்களவைத் தேர்தல் நாளான இன்று காலை ஏழு மணி முதலே மக்கள் வாக்களிக்க சென்றுவிட்டனர். இந்நிலையில் பேராணம்பட்டு, திருச்சங்கோடு, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன. இதன் காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் பல நிமிடங்களாகக் காத்திருக்கின்றனர்.

இன்று காலை 7 மணிக்கு மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அஜித், விஜய், விஜய் ஆண்டனி என திரைத்துறைப் பிரபலங்கள் மற்றும் முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி, சிதம்பரம் என அரசியல் தலைவர்களும் தங்களின் வாக்கைச் செலுத்தி விட்டனர்.

பல இடங்களில் வாக்கு எந்திரங்கள் பழுது என்ற தகவல்கள் வந்துள்ளன. பேரணாம்பட்டு அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் 2 வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதேபோல், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம் பாளையம் வாக்கு சாவடி எண் 166ல் வாக்கு பதிவு இயந்திரம் பழுதடைந்தது.

அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியிலும் மின்னனு வாக்கு இயந்திரத்தில் கோளாறு காரணமாக மக்களவை தொகுதிக்கான 132வது வாக்கு சாவடியில் வாக்குப்பதிவுக்காக பொதுமக்கள் காத்திருந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...