ஊரில் இருந்தும் வாக்களிக்க முடியாத நிலையில் சிவகார்த்திகேயன்!

ஏப்ரல் 18, 2019 231

சென்னை (18 ஏப் 2019): நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நாளான இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குச் சாவடிகளில் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

தமிழகத்தில் வேலூர் நீங்களாக 38 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. மேலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். நடிகர் அஜித் திருவான்மியூரில் ஓட்டு பதிவு செய்தார். நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு, மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.

இந்நிலையில், வளசரவாக்கம் குட்சஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிக்க நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி வந்தார். வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் இல்லாததால், அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று, தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இதே போல் நடிகர் ரமேஷ் கண்ணாவிற்கும் ஓட்டு சீட்டு இல்லாததால் திருப்பி அனுப்பபட்டார். நடிகர் ரோபோ ஷங்கருக்கும் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையில் பிரச்னை என்பதால் வாக்களிக்கவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...