வாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்!

ஏப்ரல் 18, 2019 254

சென்னை (18 ஏப் 2019): இன்று திருமணம் நடந்த புது மண தம்பதியினர் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற மணக்கோலத்தில் வாக்குச் சாவடிக்கு வந்து அசத்தினர்.

சென்னையில் உள்ள ஷெனாய் நகரில் இன்று நடைபெற்ற திருமணத்தில் தாலி கட்டி திருமணக் கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமாப்பிள்ளை- மணப்பெண் உற்சாகத்துடன் வந்து வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.

புது மண தம்பதிகள் வாக்களிக்க வந்ததை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...