எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு - நவாஸ் கனி குற்றச்சாட்டு!

ஏப்ரல் 18, 2019 609

ராமநாதபுரம் (18 ஏப் 2019): ராமநாதபுரத்தில் எந்த பொத்தானை அழுத்தினாலும், தாமரைக்கு வாக்கு பதிவாகிறது என்று ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி புகார் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுகவின் கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். நவாஸ் கனிக்கும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் நவாஸ்கனி சாயல்குடியில் உள்ள வாக்கு சாவடியை பார்வையிட்டார். பின்னர், பேட்டியளித்த அவர், சிக்கல் பகுதிகளில் உள்ள வாக்கு மையங்களில் எந்த சின்னத்தை அழுத்தினாலும் தாமரை சின்னத்திற்கே வாக்கு பதிவதாக தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து அதிகாரிகளிடம் நவாஸ் கனி புகார் அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...