சிதம்பரம் அருகே பரபரப்பு - இரு கட்சியினரிடையே கலவரம்!

ஏப்ரல் 18, 2019 382

சிதம்பரம் (18 ஏப் 2019): சிதம்பரம் தொகுதியில் விசிகவின் பானை சின்னத்தை உடைத்ததால் இரு கட்சியினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.

தமிழகம், புதுவை உள்பட 97 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடை பெற்றது. இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் பொன்பரப்பி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் பானையை வேறொரு கட்சியை சேர்ந்தவர்கள் தெருவில் போட்டு உடைத்துள்ளனர்.

இதனால் அங்கு போராட்டம் வெடித்தது. 20க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டது. இதையடுத்து அங்கு 100க்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு நிலைமை சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...