அடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டி!

ஏப்ரல் 19, 2019 371

சென்னை (19 ஏப் 2019): வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினி தொடங்கவுள்ள கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளார்.

புதிய கட்சி தொடங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்த ரஜினி இதுவரை கட்சி தொடங்கவில்லை. எனினும் கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். கட்சிக்கு பெயரும் இன்னும் சூட்டப்படவில்லை.

இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ரஜினி அறிவித்துள்ளார்.

வரும் மே 23 ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போகும் நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வர வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...