அந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிரம்!

ஏப்ரல் 21, 2019 522

புதுக்கோட்டை (21 ஏப் 2019): பொன்னமராவதி பகுதியில் நிகழ்ந்த மோதல் சம்பவங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக கலிபோர்னியாவில் உள்ள வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் வாட்ஸ் அப் நிறுவனம் அளிக்கும் தகவலின் அடிப்படையில் ஆடியோவை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொன்னமராவதியில் "சட்ட ஒழுங்கு இயல்பாகவே உள்ளது. இன்று அங்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை" என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...