மன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை!

ஏப்ரல் 23, 2019 5712

சென்னை (23 ஏப் 2019): இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை கிண்டலடித்து தலைப்பிட்ட தினமலர் பத்திரிகை மன்னிப்பு கேட்டுள்ளது.

நேற்று முன் தினம் இலங்கையில் 8 இடங்களில் பயங்கரவாதிகளால் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப் பட்டது. இதில் 300க்கும் அதிமானோர் உயிரிழந்தனர். 500 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் பலரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தினமலர் பத்திரிகை இச்சம்பவம் குறித்த தலைப்பில் ஓ சேசப்பா என்று தலைப்பிட்டிருந்தது. இந்த தலைப்பிற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த தலைப்பு யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாக தினமலர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...