வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை!

ஏப்ரல் 24, 2019 188

சென்னை (24 ஏப் 2019): வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகவுள்ளதால் வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 28-ம் தேதி முதல் மழை பெய்ய துவங்கும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 29-ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏப்ரல் 28-ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. இலங்கை கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 5 செ.மீ. மழையும், கோவை வால்பாறையில் 4 செ.மீ. மழையும், தஞ்சை, மதுக்கூர், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...