தயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்!

ஏப்ரல் 24, 2019 335

மதுரை (24 ஏப் 2019): முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் முறைகேடாக கிரானைட் வெட்டி கடத்தியதாக துரை தயாநிதி மீது புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த முறைக்கேடு மூலம் அரசுக்கு சுமார் ரூ.250 கோடி நஷ்டம் ஏற்ப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும் சட்டவிரோத முறையில் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை விசாரித்து வந்தது.

இந்தநிலையில், இன்று அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் துரை தயாநிதி அழகிரியின் சொத்துக்களை முடக்கியது.

சென்னை மற்றும் மதுரையில் உள்ள சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டு உள்ளது எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...