அரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து!

ஏப்ரல் 24, 2019 458

சென்னை (24 ஏப் 2019): ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் நான் அரசியலில் இருப்பது பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், பாமக கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் போக்கினை கண்டித்து அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாமகவின் வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்து இந்த பிரச்சனைக்கு திமுகதான் காரணம் என்றும் இந்த பிரச்னையை வைத்து அரசியல் செய்கின்றனர் என்றும் கூறினார் .

இந்த நிகழ்வுக்குப் பிறகு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய கூட்டமொன்றில் பேசிய திருமாவளவன் வன்னிய இன மக்களுக்கு முதல் எதிரியே பாமக கட்சிதான் என்றும், நான் அரசியலில் இருப்பது பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் பிடிக்கவில்லை என்றால் நான் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் அதுதான் எனக்குத் தேவை. அந்த உழைக்கும் மக்கள் நிம்மதியாக இருக்க என்னோட அரசியல் வாழ்க்கையை விட தயார் என்றும் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...