ஃபானி புயல் தமிழகத்தை தாக்கும் அபாயம்!

ஏப்ரல் 25, 2019 492

சென்னை (25 ஏப் 2019): தென்கிழக்கு வங்க்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது புயலாக மாறி 30-ம் தேதி தமிழகத்தை கடக்க உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில், இந்திய பெருங்கடல் - வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தது.

அதன்படி இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

”புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் அது வலுப்பெற்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, புயலாக மாற வாய்ப்பு உள்ளது. புயலாக மாறினால் அதற்கு ஃபனி (Cyclone Fani) என பெயரிடப்படும். இந்த புயல் 30-ம் தேதி தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு உள்ளது.

புயல் கரையை கடக்கும்போது 90 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும். இதனால், பல இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கன்னியாகுமரியின் கடலோர பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால், மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...