ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை!

ஏப்ரல் 26, 2019 367

சென்னை (26 ஏப் 2019): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடைவிதிக்ககோரி அப்பலோ மருத்துவமனை நீதிமன்றத்தில் அளிக்கப் பட்ட மனுவை இன்று(வெள்ளிக்கிழமை) விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த விசாரணையின் போது அப்பலோ மருத்துவமனையின் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கும்படியும் உயர்நீதிமன்றம் மனு அளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...