தமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

ஏப்ரல் 26, 2019 815

சென்னை (26 ஏப் 2019): மஜக எம்.எல்.ஏ மற்றும் டிடிவி ஆதரவு எம் எல்.ஏக்கள் ஆகிய நான்கு பேருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமுமுன் அன்சாரி திமுகவுக்கு ஆதரவளித்தார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அவருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளார். அதேபோல டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள், பிரபு, ரத்தின சபாபதி மற்றும் கலைச் செல்வன் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப் பட்டுள்ளது.

சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோரிடம் சபாநாயகர் தனபால் ஆலோசனை நடத்திய பின்பு இந்த முடிவு எட்டப் பட்டுள்ளது.

15 நாட்கள் அவகாசத்தில் இவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். ஒருவேளை நால்வரும் தகுதி நீக்கம் செய்யவும் வாய்ப்பு உள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...