ஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - மாணவி பகீர் புகார்!

ஏப்ரல் 26, 2019 325

பெரம்பலூர் (26 ஏப் 2019): பொள்ளாச்சியைப் போல அடுத்த அதிர்ச்சி தகவலாக பெரம்பலூரில் ஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுவதாக மாணவி ஒருவர் பேசிய ஆடியோ தார்போது வைரலாகி வருகிறது.

பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷாமித்தலிடம் வழக்கறிஞர் ஒருவ அளித்துள்ள புகாரில், பல குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகளிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி அழைத்து சென்று தங்களின் வற்புறுத்தி உல்லாசம் அனுபவித்து, அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டுள்ளனர்.

இதைவைத்து, அவர்களின் தேவைக்கு மிரட்டி தன்னிடமோ அல்லது பிறரிடமோ பாலியல் இச்சைக்கு இணங்க சொல்லி தொல்லை கொடுத்து வருவது, அதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கும் பெண்களிடம் வீடியோவை வெளியிடுவோம் என்றும் அதனால் உன் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் என, மிரட்டியும் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதனால், பல பெண்கள் இவர்களால் சீரழித்துள்ளனர். உரிய விசாரணை மேற்கொண்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரில் பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைப்போல தற்போது பெரம்பலூரில் நடந்திருப்பது தமிழகத்தில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி கூறியதாவது, இந்த சம்பவம் குறித்து ஏடிஎஸ்பி ரங்கராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படும் என்று பதில் அளித்தார். இதுதொடர்பான விசாரணையில், தங்கள் ஆசைக்கு இணங்கியதுபோல், தங்களுக்கு நெருக்கமான முக்கிய பிரமுகர்களிடமும் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்களை போலி நிருபரும், அதிமுக பிரமுகரும் மிரட்டியது தெரியவந்தது.

அதற்கு மறுப்பு தெரிவித்த பெண்களிடம் நாம் ஒன்றாக இருக்கும்போது எடுத்த வீடியோவை வெளியிடுவேன் எனக்கூறி மிரட்டி இருக்கின்றனர். இதன்பின், பாதிக்கப்பட்ட பெண், காவல்துறையிடம் தகவல் தெரிவித்தபோது இந்த விஷயங்கள், வெளிஉலகுக்கு அம்பலமானது.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷாமித்தல் உத்தரவின்பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி 3 பிரிவுகளின்கீழ் அதிமுக முக்கியப் பிரமுகர், போலி பத்திரிகையாளர், இன்னும் சிலர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். அதன்படி 354ன் பிரிவின்படி ஒருபெண்ணின் மானத்துக்கு பங்கம் ஏற்படுத்துகின்ற கெட்ட நோக்கத்தோடு தாக்குதல் நடத்துவது, 504 பிரிவின்படி கொடுங்காயம் ஏற்படுத்துவதாகக்கூறி மிரட்டுதல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...