கோவை குண்டுவெடிப்பில் கைதான பாட்ஷா கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அவருக்கு பரோல் கேட்டு அவரது மகள் மனு கொடுத்துள்ளார். இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் பரோல் தரக்கூடாது என இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோபிநாத் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ஜூன் 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.