மறைக்கப் பட்ட பாலியல் வன்கொடுமை - வெளிக் கொண்டு வந்த வழக்கறிஞர் மீதே வழக்கா?

ஏப்ரல் 30, 2019 383

சென்னை (30 ஏப் 2019): மறைக்கப்பட்ட பெரம்பலூர் பாலியல் வன்கொடுமையை வெளிக்கொண்டுவந்த வழக்கறிஞர் மீதே பொய் வழக்கு போடப்பட்ட நிலையில், சிபிஐ விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் பாசறை சார்பாக வழக்கு தொடர நாம் தமிழர் கட்சி முடிவெடுத்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளைப் போல பெரம்பலூரில் ஆளுங்கட்சி நிவாகிகளால் நடத்தப்பட்டு மறைக்கப்பட்டப் பாலியல் வன்கொடுமைகள் குறித்து தகவல்களை உரிய ஆதாரத்துடன் வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் அவர்களின் புகார் மனுவின் மீது பெரம்பலூர் மாவட்டக் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்த வழக்கறிஞர் அருள் மீதே பொய்யான வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

இந்த அநீதியைக் கண்டித்தும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளைப் போல பெரம்பலூர் பாலியல் வன்கொடுமைக்கும் மத்தியப் புலனாய்வு விசாரணை நடத்தக்கோரியும் நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை சார்பாக மூத்த வழக்கறிஞர் பாலு அவர்கள் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று 30-04-2019 வழக்குத் தொடுக்கவுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...