கொண்டு வந்தவர்களே அதனை மூடுவதாக வாக்குறுதி!

மே 02, 2019 187

ஒட்டப்பிடாரம் (02 மே 2019): ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக திமுக ஆட்சியில் மூடப்படும் என்று ஒட்டப்பிடாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்காளர்களிடம் உறுதி அளித்தார்.

ஒட்டப்பிடாரம் தொகுதியின் கோரம்பள்ளம் பகுதியில் திமுக வேட்பாளர் சண்முகையாவிற்கு ஆதரவாக அக்கட்சியின் முக ஸ்டாலின் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் "கடந்த ஏப்ரல் 18ம் தேதி ஏற்கனவே நீங்கள் பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தலில் வாக்களித்து இருப்பீர்கள். அப்போது நான் கனிமொழிக்காக இங்கு பிரச்சாரத்திற்கு வந்த போது பெரும் வரவேற்பு அளித்தீர்கள்.

இப்போது ஒட்டப்பிடாரத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவிற்கு ஆதரவாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்ட போது, இறந்தவர்களின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ஆறுதல் சொன்னோம். இதேபோல் பல மக்கள் பணிகளில் உங்களோடு இருந்து பாடுபட்டது திராவிட முன்னேற்ற கழகம். ஆக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், உங்களுக்காக போராடுகிற, பணியாற்றுகிற அந்த உரிமையுடன் உங்களிடத்தில் உதய சூரியனுக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன்." என்றார்.

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு அடித்தளம் போட்டதே திமுக ஆட்சிதான் என்கிற வாதமும் உண்டு. ஆக கொண்டு வந்தவரகளே மூடுவதாக தெரிவிப்பது வேடிக்கை என்கின்றனர் மக்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...