ராமலிங்கம் படுகொலை வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை!

மே 02, 2019 452

திருச்சி (02 மே 2019): திருபுவனம் ராமலிங்கம் படுகொலை தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் திருச்சி, கும்பகோணம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதியன்று தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 16 பேர் மீது திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் 11 பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, ராமலிங்கம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் ஏஎஸ்பி சவுகத் அலி தலைமையிலான 4 பேர் கொண்ட குழு தமிழகம் வந்து இக்குழு விசாரணை நடத்தி வருகிறது. ராமலிங்கத்தின் மகன், கைதான 11 பேர், திருவிடை மருதூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் இக்குழுவினர் விசாரணை நடத்தினர்.

திருபுவனம், திருவிடைமருதூர் பகுதிகளில் விசாரணை நடத்திய தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள், திருச்சி பாலக்க்கரையில் உ ள்ள பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்தத் தொடங்கினர். மேலும் கும்பகோணத்திலும் விசாரணை நடத்திய அதிகாரிகள், காரைக்காலில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்திலும் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...