மிண்ணனு வாக்குபதிவு இயந்திர பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் தற்கொலை!

மே 03, 2019 492

திருப்பூர் (03 மே 2019): மிண்ணனு வாக்குபதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறையின் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ள விவகாரம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவரது மகள் பர்வின் பாவி வயது 23. இவர் 2017-ம் ஆண்டு தமிழக போலீசில் சேர்ந்துள்ளார். 2018-ம் ஆண்டு முதல் திருப்பூர் மாவட்ட போலீசில் பணியாற்றி வருகிறார்.

இந்த பெண் காவலர் திருநகர் பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்தார். நேற்று பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மிண்ணனு வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். மதியம் 2:30 மணி அளவில் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் இரவு 7:30 மணி அளவில் திடீரென கையில் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து உள்ளார். உடனே மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பெண் காவலர் பர்வீன் பாவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஊரக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மிண்ணனு வாக்குபதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறையின் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...