தொடங்கியது நீட் தேர்வு!

மே 05, 2019 210

சென்னை (05 மே 2019): நீட் பொது நுழைவுத்தேர்வு, சரியாக, பிற்பகல் 2 மணிக்குத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மிகுந்த ஆர்வத்துடன், மாணவ, மாணவிகள், நீட் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும், மருத்துவ படிப்புகளுக்காக நீட் பொது நுழைவுத்தேர்வு இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில், சென்னை, சேலம், கோயம்புத்தூர் உட்பட 14 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும், 31 மையங்களில் நீட் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்கியுள்ளது.

சென்னையில், மயிலாப்பூர், கே.கே.நகர், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள தேர்வு மையங்களுக்கு, காலை 10.30 மணியளவில் பெற்றோருடன் வந்திருந்த மாணவ, மாணவிகள், மிகுந்த ஆர்வத்துடன், நீட் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

இதேபோன்று, கோயம்புத்தூர் மாவட்டத்திலும், அமைக்கப்பட்டுள்ள 32 மையங்களில் நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூரை பொருத்தவரை, மாநகர பகுதியில் 21 மையங்களும், புறநகர் பகுதியில், 11 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கடைசி நேர பரபரப்பையும், அசெளகரியங்களையும் தவிர்க்கும் வகையில், தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே, மாணவர்கள் வருகை புரிந்தனர்.

இதேபோல், சேலம் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 389 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக, சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும், 17 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மட்டுமின்றி, அதன் அருகாமையில் உள்ள நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், நீட் தேர்வு மையங்களுக்கு காலை முதலே வரத் தொடங்கிய நிலையில், மிகுந்த ஆர்வத்துடன் நீட் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை, தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பிற்பகல் 2 மணிக்கு, நீட் எனப்படும், பொது மருத்துவ நுழைவுத்தேர்வுத் தொடங்கும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.

இதேபோன்று, மதுரை மாவட்டத்தில் 30 மையங்களிலும், திருச்சியில் 18 மையங்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் 15 மையங்களிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 மையங்களிலும், மிகச்சரியாக, பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு தேர்வு மையத்தின் உள்ளேயும், வெளியேயும், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்க, பறக்கும் படையில், தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...