ஒடிசாவிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள் - நடிகர் கமல் ஹாசன்!

மே 05, 2019 260

சென்னை (05 மே 2019): ஃபானி புயலை திறமையாக கையாண்ட ஒடிசா அரசிடம் மற்ற மாநில அரசுகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் ஃபனி புயல் உருவானது. இது தமிழகத்துக்கானது என கணிக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக ஒடிஸா மாநிலத்தில் புரி கடலோர பகுதியில் நேற்று முன் தினம் கரையை கடந்தது.

இந்த ஃபானி புயல் பெருத்த சேதத்தை ஏற்படுத்திய போதும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரியளவில் உயிர் சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இது பெரும் பாராட்டை பெற்றுள்ளது. ஐநா.வின் பேரழிவு குறைப்பு முகமையும் இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஃபனி புயல் பேசிய கமல்ஹாசன், சுயமரியாதை உள்ள எந்தவொரு அரசும் ஒடிசாவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதே வேளையில், தமிழர்கள் இன்னும் கஜா புயலை நினைவுக்கூர்ந்து வருவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...