நீட் தேர்வு எழுத வந்த மாணவி திடீர் மரணம்!

மே 06, 2019 333

மதுரை (06 மே 2019): மதுரையில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியைச் சேர்ந்த மாணவி சந்தியா, நீட் தேர்வு எழுவதற்காக மதுரை வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதிவிட்டு, பேருந்தில் ஊர் திரும்பியுள்ளார். திருப்புவனம் அருகே பேருந்து சென்றபோது, மாணவி சந்தியா மயங்கி விழுந்துவிட்டார். உடனே அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சந்தியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தற்போது அந்த மாணவியின் தந்தை சிவகங்கை, திருபுவனம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், இந்த மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதியப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்குப் பிறகே மாணவியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...