கொலை வழக்கிலிருந்து விடுதலை ஆகிறார் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா!

மே 06, 2019 234

சென்னை (06 மே 2019): கொலை வழக்கிலிருந்து எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா விடுதலையாகிறார்.

கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஒருவரின் சடலத்தின் அருகில் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா அமர்ந்திருந்தார். இதனால் சடலமாக கிடந்தவரை பிரான்சிஸ் கிருபா கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது. இந்தத் தகவல் தமிழ் வாசகர் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரான்சிஸ் கிருபாவிடம் போலீஸார் விசாரித்தபோது, ``நான் கொலை செய்யவில்லை, உதவிதான் செய்தேன்!’’ என்று கூறினாராம். இதற்கிடையில், காவல் நிலையத்தில் பிரான்சிஸ் கிருபா இருக்கும் தகவல் அவரின் நண்பர்களுக்குத் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள், பிரான்சிஸ் கிருபா யாரையும் கொலை செய்திருக்க மாட்டார் என்று போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் போஸ்ட் மாட்டம் ரிப்போர்ட் பிரான்சிஸ் கிருபாவிற்கு சாதகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சட்ட விவகாரங்கள் சரி செய்யப்பட்டு பிரான்சிஸ் கிருபா விடுதலை செய்யப்படுவார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...