தமிழர்களை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர்!

மே 07, 2019 398

தூத்துக்குடி (07 மே 2019): அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தமிழகத்தில் இருப்பவர்ளுக்கு ஹிந்தி தெரியாததால் வேலை கிடைப்பதில்லை என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக வேலை தமிழர்களுக்கே என இணைய போராட்டம் நடைபெற்றது. அதே போல தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திஅய் அரசு வேலிஅ கிடைப்பதில்லை என்ற பேச்சும் இருந்து வந்தது.

இந்நிலையில், இதர்கு சர்ச்சையாக பதில் அளித்துள்ளார் அதிமுக பால்வளத்துரை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. தூத்துக்குடி ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

ரயில்வே துறையில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்காதற்கு காரணம் திமுகதான். ஹிந்தி படிக்க தெரியாததன் காரணமாகதான் மத்திய துறைகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. திமுக குடும்பத்தினர் அனைவரும் ஹிந்தி நன்கு அறிந்தவர்கள். அவர்களை தவிர யாரும் ஹிந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஹிந்தி தெரியாததால் வேலை கிடைக்கவில்லை என கூறியதை பலர் விமர்சித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...