தமாகா பாஜகவில் இணைகிறதா? - வாசன் விளக்கம்!

மே 10, 2019 329

சென்னை (10 மே 2019): தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக வந்த தகவல்களை ஜி.கே.வாசன் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்தன்மையுடன் செயல்படுகிறது. கட்சியின் வளர்ச்சியை பிடிக்காதவர்களின் சதி இது. பா.ஜ.க.வில் இணைவதாக வந்த செய்திகள் வடிகட்டிய பொய் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகளுக்காக காங்கிரஸ் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...