இந்தியாவின் முதல் தீவிரவாதியே இந்துதான் - நடிகர் கமல் பொளேர்!

மே 13, 2019 362

அரவக்க்குறிச்சி (13 மே 2019): இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பள்ளபட்டி அண்ணா நகர் பகுதியில் பேசிய அவர்,

இது முஸ்லிம்கள் நிறைந்த பகுதி. இங்கு மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும். ஆதரவு இருக்கும் பகுதிகளில் எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மோடியை நாடினால் நல்லது நடக்கும் என சிலர் நினைக்கின்றனர். உள்ளூர் மக்களுக்கு என்ன தேவையோ இதை பற்றியே பேச வேண்டும்.

முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்.

நான் நல்ல இந்தியன் என்பதை மார் தட்டி சொல்வேன். எங்கள் மக்கள் நீதி மையத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இவ்வாறு கமல் பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...