கோட்சே யார்? - சுப்பிரமணியன் சாமி புது விளக்கம்~

மே 13, 2019 555

சென்னை (13 மே 2019):கோட்சே தீவிரவாதியல்ல என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி விளக்கம் அளித்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகர் கமல்ஹாசன் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.

கமலின் இந்த பேச்சு பரபரப்பாக பேசப் பட்டு வருகின்ற நிலையில், .இது குறித்து பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். கமல் கூறியப்படி கோட்சே தீவிரவாதி இல்லை. கோட்சே ஒரு கொலைக்காரன். யார் தீவிரவாதி என ஐநா ஒரு வரையறை கொடுத்துள்ளது. தேசத்தையும் மக்களையும் அச்சுறுத்துபவர்தான் தீவிரவாதி. கோட்சே மகாத்மா காந்தியை கொலை செய்த கொலையாளிதான். என்று சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...