டோல்கேட்டில் அரசு விரைவுப் பேருந்து சிறைபிடிப்பு!

மே 14, 2019 418

மதுரை (14 மே 2019): மதுரை திருமங்கலம் டோல்கேட்டில் அரசு விரைவு பஸ் சிறைப்பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கோட்டையில் இருந்து கோயம்புத்தூருக்கு நேற்று முன் தினம் அரசு விரைவு பஸ் டிஎன் 01 7994 சென்று விட்டு நேற்று இரவு 8-30 மணிக்கு அதே பஸ் கோயம்புத்தூரில் இருந்து செங்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தது பஸ்ஸில் முன்பதிவு செய்த பயணிகளும் முன்பதிவு செய்யாத பயணிகள் என ராஜபாளையம், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை செல்ல 42 பேர் பயனம் செய்தனர். இரவு 2-45 மணியளவில் மதுரை திருமங்கலம் டோல்கேட் வந்த போது செங்கோட்டை செல்லும் பஸ் என்பதால் டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் டிரைவர் பஸ்ஸை எடுத்தார்.

அப்போது அந்த ஊழியர் கட்டணம் கேட்கவே டிரைவர் செங்கோட்டை செல்வதால் கட்டணம் செலுத்த தேவையில்லை என டெப்போவில் கூறியுள்ளதாக கூறினார். உடனே பஸ்ஸின் முன்பக்கம் பாய்ந்த சில ஊழியர்கள் பஸ்ஸை மறித்தனர். உடனடியாக அருகில் குவிந்த ஊழியர்கள் பஸ்ஸின் மூன்று புறமும் பேரிகாட் வைத்து சிறை பிடித்து அரசு விரைவு பஸ்ஸின் டிரைவர் மற்றும் கன்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடும் சத்தத்தால் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் விழித்து எழுந்து பஸ்ஸிற்க்கு வெளியே வந்து நின்றனர்.

இருப்பினும் டோல்கேட் தரப்பில் திருநெல்வேலி சென்னை வழித்தடத்தில் ஓடும் பஸ் என்பதால் டோல்கேட் கட்டணம் கட்டாமல் விட முடியாது என்றனர். இதனை பார்த்த அவர் வழியாக செங்கோட்டை செல்லும் பிற விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நிறுத்தப்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சுமார் அரைமணி நேரம் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் நெருக்கடி அதிகமானதை தொடர்ந்து பஸ்ஸை சிறைபிடித்திருந்த பேரிகாடை அகற்றி பஸ்ஸை விடுவித்தனர். இது குறித்து டோல்கேட் தரப்பில் ராஜபாளையம் செங்கோட்டை பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கு மட்டும் தான் டோல்கேட் கட்டணம் கிடையாது பிற டெப்போ பஸ்களுக்கு கட்டாயம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றனர்.

வாகன ஓட்டிகள் தரப்பில் இந்த டோல்கேட் அமைக்கப்பட்ட போது திருமங்கலம் டிகல்லுப்பட்டி, ஸீரிவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை பகுதியில் உள்ள வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்க கூடாதென எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன்படி சில காலம் வசூலிக்கப்படவில்லை, ஆனால் இப்போது அரசு பஸ்கள் தவிர்த்து அனைத்து வாகனங்களும் கட்டாய வசூல் நடக்கும் நிலையில் அரசு பஸ்களையும் கட்டாயப்படுத்தி வசூலிப்பதும் இது தொடர்பாக தினமும் பல தடவை இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்படுவதும் நடைபெறுகிறது டோல்கேட் கட்டணம் வசூலிக்க கூடாதென எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிம்மதியாக பயணிக்க ஏற்பாடு செய்ய விரும்புகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...