கமலை விமர்சிக்க முடியாமல் முஸ்லிம்களை விமர்சித்த ஹெச்.ராஜா!

மே 17, 2019 592

சென்னை (17 மே 2019): பள்ளப் பட்டியில் கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என கமல் ஹாசன் பேசியதை விமர்சிப்பதாகக் கூறி வழக்கம்போல் முஸ்லிம்களை விமர்சித்துள்ளார் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா.

கமல் ஹாசனின் கருத்து குறித்து பேசிய ஹெச்.ராஜா, "முஸ்லிம் ஓட்டுக்கள் வாங்க வேண்டும் என்ற, மிக கேவலமான எண்ணத்தில்தான் கமல் ஹாசன் இந்து தீவிரவாதம் குறித்து பேசியுள்ளார். பள்ளப் பட்டியைப் பற்றி கமலுக்கு என்ன தெரியும்? அங்கு இந்துக்கள் நடமாடமுடியாது. பள்ளபட்டியில் காவல் நிலையம் கிடையாது. புகார் கொடுக்க வேண்டும் எனில் ஜாமத்தில் தான் கொடுக்க வேண்டும். இதை பற்றி பேச தைரியம் உள்ளதா கமலுக்கு?

கமல்ஹாசன் குடும்பம் கிறிஸ்துவ குடும்பம். இஸ்லாமியர்களின் கைக்கூலியாக கமல்ஹாசன் செயல்படுகிறார் கிருஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் செய்யும் தவறை எந்த ஊடகமும் காட்டுவதில்லை பேசுவதில்லை.எல்லா ஊடகங்களும் இந்து விரோதமாக செயல் படுகின்றது. என்றார் ஹெச்.ராஜா வழக்கம்போல்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...