தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’’ என்று பேசினார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகள் கமலுக்கு எதிராக போர்கொடி உயர்த்தியுள்ளன.
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பிரதமர் கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த கமல் ஹாசன் ‘‘பிரதமருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. சரித்திரம் பதில் சொல்லும், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியதில் தவறு இல்லை. இது உருவான சர்ச்சை அல்ல, உருவாக்கப்பட்ட சர்ச்சை’’ என்று பதில் அளித்தார்.