தகுதி நீக்கம் செய்யப்படுவாரா ஓபிஎஸ் மகன்?

மே 19, 2019 839

தேனி (19 மே 2019): தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே பெயருக்கு பின்னால் எம்பி என போட்ட ஓபிஎஸ் மகனை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் வரும் 23 ஆம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார்.

ஆனால் கோவில் கல்வெட்டு ஒன்றில் ரவீந்திரநாத் பெயருக்கு பின்னால் எம்பி என போடப் பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முடிவுகள் வரும் முன்பே எப்படி எம்பி என போடலாம்? என்ற கேள்வி எழுந்தன.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன. அதில் ரவீந்திரநாத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரப் பட்டுள்ளது.

ரவீந்திரநாத் மீது ஏற்கனவே பல புகார்கள் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...