மோடியின் கேதர்நாத் தியானம் குறித்து பகீர் கிளப்பும் சந்தீப் தீக்சித்!

மே 20, 2019 693

புதுடெல்லி (20 மே 2019): பிரதமர் மோடியின் கேதர்நாத் தியானம் ஒரு திட்டமிட்ட நாடகம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சந்தீப் தீக்‌ஷித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "பிரதமர் மோடி தேர்தலுக்காக நடத்திய நாடகமே கேதர்நாத் தியானம். பக்தி என்பது ஒரு தனிமனிதனின் விருப்பம். இதனை விளம்பரமாக்கும்போது அது அரசியலாகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி திட்டமிட்டு நடத்திய நாடகமே கேதர்நாத் தியானம்.

பிரதமர் மோடி தங்கியிருந்த குகையை இதுவரை நான் பார்த்தது இல்லை. அது கடந்த ஒரு வருடமாக உருவாக்கப் பட்ட ஒரு குகை. பிரதமரின் நாடகத்திற்காக இதனை திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் ஊடகங்கள் இதனை தெளிவாக விளம்பரமாக்கியிருக்கின்றன."என்றார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...