எக்ஸிட் போல் குறித்து ஸ்டாலின் கருத்து!

மே 20, 2019 477

சென்னை (20 மே 2019): கருத்துக் கணிப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நடைபெற்று வந்த மக்களவை தேர்தல், நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் மத்தியில் பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றி, பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகத்தில் திமுகவிற்கு சாதகமாக அமையும் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும். மத்திய அரசில் அங்கம் வகிப்பது பற்றி, மே 23ஆம் தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும்.

கருத்துக்கணிப்புகளைப் பொறுத்தவரை திமுகவிற்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும், அதனை ஒருபோதும் பொருட்படுத்துவது இல்லை. எங்களுக்கு திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வழிகாட்டி இருக்கிறார். என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...