சந்தி சிரிக்கும் தந்தி டிவி - வீடியோ!

மே 21, 2019 1687

சென்னை (21 மே 2019): தந்தி தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பை சந்தி சிரிக்க வைத்துள்ளார் அமுமுக நிர்வாகி.

ஏழு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப் பதிவுகளின் வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் நடக்க உள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவற்றில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எதிர்கட்சிகள் ஊடகங்களின் கருத்துக் கணிப்பை ஏற்கும் நிலையில் இல்லை. காரணம் பாஜகவின் நடப்பு ஆட்சியில் மக்கள் அனுபவித்த அவலங்களை பார்க்கும் போது பாஜக எந்த வகையிலும் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற நிலையில் தேர்தல் முறைகேடு, மற்றும் ஊடகங்களின் தகிடுதத்தம் ஆகியவற்றால் உளவியல் ரீதியாக மக்களை ஒரு மனநிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியாகவே இந்த கருத்துக் கணிப்புகளை எதிர் கட்சிகள் நினைக்கின்றன.

இது இப்படியிருக்க கருத்து கணிப்பு என்ற பெயரில் தந்தி தொலைக்காட்சி செய்த தகிடுதத்தத்தை பொன்னமராவதி அமுமுக நிர்வாகி பாரதிராஜா என்பவர் ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்.

காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாத நிலையில் அங்கு மக்கள் நீதி மய்யத்துக்கு 3 சதவீதம் முதல் 6 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளதாக கருத்துக் கணிப்பு நடத்தி வேடிக்கை காட்டியுள்ளது தந்தி டிவி.

இந்நிலையில் பாரதிராஜா தந்தி டிவி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வீடியோ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...