ஆபாச நடனம் - பெண் போலீஸ் மீது புகார் அளித்த மகள் திடீர் பல்டி!

மே 22, 2019 527

சென்னை (22 மே 2019): பெற்ற தாயே என்னை பாரில் ஆபாச நடனம் ஆட வைத்து சம்பாதித்ததாக கண்ணீருடன் பேட்டி அளித்த பெண் தற்போது போலீஸிடம் மன்னிப்பு கேட்க உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கோட்டூர்புரம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.விஜயலட்சுமி. பெற்ற மகளே விஜயலட்சுமி மீது சில தினங்களுக்கு முன்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் ஒரு பகீர் தகவலை தெரிவித்தார்.

என் அம்மா இன்ஸ்பெக்டர் என்பதால் அவரை பற்றி எந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தாலும் பெரிசா எடுத்துக்கறது இல்லை. இதனால என் உயிருக்கு ஆபத்து இருக்கு. என்னையும் என் அண்ணன் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று அழுதுகொண்டே சொன்னார்.

இந்நிலையில் இன்றி அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார் அதில், "26.4.2019 அன்று, என் அண்ணன், மற்றும் அண்ணி ஆகியோருடன் கொடுத்த குடும்ப பிரச்சனையை, பிரஸ் மீட் வைத்து தெரிவித்ததில், அது சம்பந்தமாக காவல் துறையிடமும், தன் உறவினர்கள், நண்பர்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் மன்னிப்பு கேட்க நாளை வருகிறேன்" என்று குறிப்பிட்டு, கீழே, "கேண்டி ஸ்வாரிஸ்" என்று கையெழுத்து போட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...