திருமாவளவன் மீண்டும் முன்னிலை!

மே 23, 2019 425

சிதம்பரம் (23 மே 2019): சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் முன்னிலை பெற்று வருகிறார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தெர்தல் வாக்கு எண்ணிக்கை காலையில் 8 மணியில் இருந்து நடந்து வருகிறது.இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார்.

காலையிலிருந்தே அதிமுக வேட்பாளருக்கும் திருமாவளவனுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. திருமாவளவன் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் சற்று முன் வந்த தகவல் படி திருமாவளவன் முன்னிலை பெற்று வருகிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...