அழிகிறதா தேமுதிக?

மே 23, 2019 296

சென்னை (23 மே 2019): நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலயில் தேமுதிக ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்க வில்லை.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக போட்டியிட்ட நான்கு தொகுதியில் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.கூட்டணியில் சீட் கேட்ட போது பாமகவுக்கு இணையாக தொகுதிகள் கேட்டனர். ஆனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேமுதிக மிகவும் பின்னடைவில் உள்ளது.

தேமுதிகவின் இந்த தோல்விக்கு கட்சி தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது.மேலும் கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நிலையால் தொண்டர்கள் உற்சாகமின்றி களப்பணியை மேற்கொண்டதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...