நீண்ட இழுபறிக்குப் பிறகு திருமாவளவன் வெற்றி!

மே 23, 2019 551

சிதம்பரம் (23 மே 2019): சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன் நீண்ட இழுபறிக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாயின.

இதில் பாஜக எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தேனி தொகுதியை தவிர 37 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் தற்போது 3,186 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னடைவில் உள்ளார். பழுதடைந்துள்ள 6 வாக்கு இயந்திரங்களில் விவிபேட் ஒப்புகை சீட்டு எண்ணும் பணி தொடங்கியது. இதனை அடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...