பறிபோகும் தமிழிசை பதவி - உள்ளே நுழைகிறார் மத்திய அமைச்சர்!

மே 24, 2019 937

சென்னை (24 மே 2019): தமிழக பாஜக தலைவராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன் பதவி பறிக்கப் பட்டு நிர்மலா சீதாராமன் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்கக் கூடும் என தெரிகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுக்க பாஜக மட்டும் தனியாக 303 இடங்களில் வென்றுள்ளது. பாஜக அக்கூட்டணி 363 இடங்களில் வென்று சாதனை படைத்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணி படு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 5 இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. அதோடு, பாஜகவின் கூட்டணியான அதிமுக, பாமக என்று எல்லா கட்சிகளும் மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தான் போட்டியிட்ட தூத்துக்குடியில் மோசமான தோல்வியை தழுவி இருக்கிறார். இதனால் தமிழக பாஜக தலைமை விரைவில் மாற்றப்பட உள்ளது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் பதவிக் கால முடிந்து, அது நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் பதவியை நீட்டிக்கும் எண்ணத்தில் பாஜக தலைமை இல்லை.

எனவே நிர்மலா சீதாராமனின் அமைச்சர் பதவி பறிக்கப் பட்டு அவரை தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்ய பாஜக தலமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...