மத்திய அமைச்சரவையில் ஓ.பி.எஸ் மகன்?

மே 24, 2019 368

புதுடெல்லி (24 மே 2019): மத்திய அமைச்சரவையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு அமைச்சரவையில் இடம்கொடுக்க அமித் ஷா ஓ.கே. சொல்லிவிட்டாராம்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுக்க பாஜக மட்டும் தனியாக 303 இடங்களில் வென்றுள்ளது. பாஜக அக்கூட்டணி 363 இடங்களில் வென்று சாதனை படைத்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணி படு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 5 இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. அதோடு, பாஜகவின் கூட்டணியான அதிமுக, பாமக என்று எல்லா கட்சிகளும் மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது. அபூர்வமாக ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஓகே சொல்லியுள்ளார்.

ஓபிஎஸ்ஸும் அவரது மகனும் மோடியின் வாரணாசி பேரணியில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...