கூண்டோடு மாற்றப் படும் தமிழக பாஜக!

மே 24, 2019 596

புதுடெல்லி (24 மே 2019): பாஜக அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தாலும், தமிழகத்தில் பாஜக நினைத்தது எதுவும் நடக்கவில்லை .

குறிப்பாக ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்து தொடர் வெற்றி பெற்ற பொன் ராதாகிருஷ்ணன் இந்த தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளார். மேலும் ஏற்கனவே தமிழக தலைமை மீது அதிருப்தியில் உள்ள பாஜக தலைமை விரைவில் தமிழக பாஜக நிர்வாகிகளை நீக்கிவிட்டு முழுமையாக மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்குள் கட்சியில் புதிய மாற்றம் கொண்டுவர அமித் ஷா தயாராகிவிட்டாராம். முதல்கட்ட அமைச்சரவையில் தமிழக பி.ஜே.பி-யில் யாருக்கும் வாய்ப்பு இருக்காது. இரண்டாம்கட்ட மாற்றத்தின்போது அமைச்சர் பதவி தரப்படுமாம். இடைப்பட்ட காலத்தில், தமிழக அரசியலை நன்கு தெரிந்த அதிரடியாகச் செயல்படக்கூடிய இரண்டு பேரை (நாற்பது வயதுக்காரர்கள்) தேர்தெடுத்து அவர்களுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி தந்து அமைச்சர் பதவியில் உட்காரவைத்து பி.ஜே.பி-யை வலுப்படுத்தும் அசைன்மென்ட்டை ஒப்படைக்கப்போகிறார்களாம். கடந்த ஐந்து வருடங்களில் கட்சிக்காக முழுவதுமாக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு தரப்படுமாம். யார் அந்த இருவர் என்பது அமித் ஷாவுக்கு மட்டுமே தெரியுமாம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...