ஓ.பி.எஸ் தலையில் இடியை இறக்கிய பிரதமர் மோடி!

மே 26, 2019 705

புதுடெல்லி (25 மே 2019): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர் பார்க்கப் பட்ட நிலையில் பிரதமரின் திடீர் அறிவிப்பால் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்களின் கூட்டத்தில் பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் முன்மொழிந்தனர். இதனைத் தொடர்ந்து பேசிய நரேந்திர மோடி, அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை நம்பாதீர்கள் என்று புதிய எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை வழங்கினார். அனுபவம் வாய்ந்தவர்களுக்கு உரிய இலாகா வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இதனால், அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...